Skip to main content

“உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை...” -இயக்குனர் தேசிங் பெரியசாமி 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
desing periyasamy

 

 

இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் வெளியானபோது பெரிய எதிர்பார்ப்புகளின்றி வெளியாகி, பின்னர் படம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு பலர் திரையரங்கில் பார்த்தனர். 

 

இப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி பெரும் ரஜினி ரசிகர் என்பதை தொடக்கத்திலிருந்து தெரிவித்து வந்தார். குறிப்பாக படத்தில் பல ரஜினி ரெஃபரன்ஸ் ஷாட்கள் இடம்பெற்றிருக்கும். படம் வெளியானபோதே ரஜினி சார் நல்ல படங்களை பார்த்தால் கண்டிப்பாக அழைத்து பேசுவார். அதுபோல என் படத்தையும் பார்த்துவிட்டு, அழைத்து பேசுவார் என்று காத்திருக்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுனில் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். ஷூட்டிங் எதுவும் நடைபெறாததால் பிரபலங்களும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். 

 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கை பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் இணையத்தில் லீக்காகி உள்ளது. இது தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், 

 

“வாழ்த்து தெரிவித்த எல்லாருமே, "என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க". உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.

 

ஆகையால்தான் எனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக உரையாடல் வெளியாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி”  என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரித்திர படத்தில் சிம்பு - கமல் வெளியிட்ட போஸ்டர்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
str 48 simbu poster

'பத்து தல' படத்தை தொடர்ந்து தனது 48 வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படத்தை  கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.  இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று வெளியானது. பின்பு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்திற்காக வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி சிம்பு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்து, சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். போஸ்டரில் தலைப்பு இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் இடம்பெறவில்லை. மேலும் இரண்டு சிம்பு நேருக்கு நேர் மோதத் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் வரலாற்று கதைகளில் இருக்கும் கதாபாத்திரம் போல் சிம்புவின் கெட்டப் இருக்கிறது. 

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.