Deputy Ambassador of Austria to India meets Rajinikanth

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ரஜினியை இந்தியாவுக்கான ஆஸ்திரேலியதுணை தூதர் பேர்ரி ஓ ஃபேரல் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் அடுத்த படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு" என்ற ரஜினியின் வசனத்தைகுறிப்பிட்டுள்ளார்.

Advertisment