cdvdvdbd

அப்பு, மனுஅங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப். மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்ட இவர் இயக்கத்தில் வெளியான மம்மூட்டியின் மனு அங்கிள் படம் 1989-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.

Advertisment

இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்த இயக்குனர் டென்னிஸ் ஜோசப்புக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் ஜோசப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். திடீர் மரணம் அடைந்த டென்னிஸ் ஜோசப்புக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.