Advertisment

‘டிமான்ட்டி காலனி 3’ பட அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

demonte colony 3 update

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘டிமான்ட்டி காலனி’. மோகனா மூவிஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேபா ஜெரேமியா பாடல்கள் அமைத்திருகக் எஸ். சின்னா பின்னணி இசையமைத்தார்.

Advertisment

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். முதலில் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அஜய் ஞானமுத்துவே இப்படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அஜய் ஞானமுத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Demonte colony 3 arulnithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe