Demonte Colony 2  first look and Motion Poster released

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அஜய் ஞானமுத்துவே இயக்கினார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. அதனைத்தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதல் பாகத்தில் வருவது போல் கண்ணில் கருவிழி இல்லாமல் தோன்றுகிறார். மோஷன் போஸ்டரிலும் இதே தோற்றத்துடன் தோன்றும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும் 'இருளுக்குள் வரவேற்கிறோம்' என்ற டேக் லைனுடன் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதி உட்பட டீசர், ட்ரைலர் அப்டேட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.