Demonte Colony 2 crew changes the director

Advertisment

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டபடக்குழு, அருள் நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத்தெரிவித்தது.

மேலும் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் எனத்தெரிவித்திருந்தது.இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்த படக்குழு இது தொடர்பான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கையில், அஜய் ஞானமுத்து இயக்குவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிப்பு வெளியான நிலையில் அவரது பெயர் இப்போஸ்டரில் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். வெங்கி வேணுகோபால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

எனவே 'டிமான்ட்டி காலனி 2' படத்தின்முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இயக்குவார் என்பது தெரிய வந்துள்ளது.