Advertisment

"வசந்த பாலன் பேய் படம் பண்ணது போல் இருக்கும்" - டீமன் இயக்குநர்

Demon movie press meet

சச்சின், அபர்ணதி, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டீமன்'. சோமசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படம் பற்றி இயக்குநர் கூறுகையில், "என்னுடைய ஸ்க்ரிப்ட் மேல் நம்பிக்கை வைத்து உடனே படத்தை ஆரம்பிக்க சொன்னார். இன்றைக்கு ரிலீஸ் வரைக்கும் வந்திருக்கிறது. டெல்லியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நம்ம ஊருக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்கப்பட்டது. படத்திற்கு தலைப்பு முதல்வன், அந்நியன் என ஷங்கர் சார் பட தலைப்பு போல் 'ன்' என்று முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து டீமன் என வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அந்த சம்பவத்தை மையமாக வைத்து நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

மக்களுக்கு பேய் படம் என்றாலே பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணம் தான் இப்படம் பண்ண தூண்டியது. நான் வசந்த பாலன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அவர் ஒரு ஹாரர் படம் பண்ணாஎப்படி இருக்குமோ அப்படி இப்படம் இருக்கும்" என்றார்.

Advertisment

vasantha balan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe