Advertisment

சர்ச்சையான 'காளி' போஸ்டர்; கண்டனங்களை குவித்த பாஜக - இயக்குநர் மீது வழக்கு

delhi police complaints filed director leena manimekalai

பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூக நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமூகஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, அது சார்ந்த ஆவணப்படங்களையும்இயக்கியுள்ளார். அந்த வகையில் வெளியான செங்கடல், மாடத்தி ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதோடு,விவாதங்களையும் கிளப்பியது.

Advertisment

இதையடுத்து இயக்குநர்லீனா மணிமேகலை மீண்டும் ஒரு ஆவணப்படத்தை காளி என்ற பெயரில் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்வெளியான நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமானகாளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகிரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இயக்குநர் லீனா மணிமேகலை இந்து மதத்தை அவமதிப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் டெல்லி போலீஸ்இயக்குநர்லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் லீனா மணிமேகலைக்கு எதிராக ஏகப்பட்ட புகார்கள் வந்ததன்அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகபோலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இயக்குநர் லீனா மணிமேகலை,“எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.மற்றொருபதிவில், "ஒரு மாலைப்பொழுது, டோரொண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.

bjp (170 complaints Leena Manimekalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe