/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/97_11.jpg)
அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரிக்க, பி.ஜி. முத்தையா இணைதயாரிப்பு செய்கிறார். இப்படத்தில் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அருள்நிதி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுசெய்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைவில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு மும்முரம் காட்டிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)