Deivathiru' who loved respect - a comic story told by Pandiyarajan

உதய் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம்.பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், அனிதா சம்பத், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் பேசுகையில், “மனைவியின் தம்பி அல்லது அண்ணன்தான் மச்சான். இந்த ஒரு வார்த்தையில் அற்புதமான ஒரு உறவொன்று இருக்கிறது. தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் முத்து குளிக்க கடலுக்குள் இறங்கும்போது இடுப்பிற்குள் கயிறு கட்டி கடலுக்குள் குதிக்கும் முன், அதன் மறுமுனையை மச்சான் எனும் உறவின் முறையில் இருப்பவரிடம் தான் நம்பிக்கையுடன் அளித்துவிட்டு குதிப்பர். கடலுக்குள் முத்துக்காக குதித்தவர் முத்து கிடைத்தாலும்... கிடைக்கவில்லை என்றாலும்... கயிறை இழுத்து விட, அதன் நுட்பம் அறிந்து கடலுக்குள்ளிருந்து மேலே வரவழைப்பவர் மச்சான்.

Advertisment

இதே தருணத்தில் அண்ணன் - தம்பி என்ற உறவாக இருந்தால், சொத்து விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடலுக்குள் குதித்தவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஆனால் மச்சான் என்ற உறவுதான், தன் தங்கையின் தாலி பாக்கியம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் நுட்பமாக கவனித்து கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுவர். அந்த வகையில் மச்சான் என்ற உறவு அழுத்தமானது. மேலும் தெய்வ மச்சான் என்பது அதைவிட சிறப்பானது.

ஒரு முறை நண்பர் ஒருவருக்கு திருமண பத்திரிகையை வைத்து அழைப்பு விடுத்தார் மற்றொரு நண்பர். அந்த நண்பர் பத்திரிகையில் உறவினர்களின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தார். இவரை மட்டும் 'உயர்திரு' என்று குறிப்பிட்டும்மற்றொருவரை 'தெய்வத்திரு' என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக அவர் வருத்தப்பட்டு புகார் தெரிவிக்க.,அவரிடம் இந்த 'தெய்வத்திரு' இறந்தவர்களுக்கு பயன்படுத்துவது என்ற விளக்கத்தை சொன்ன பிறகு அவர் அதிர்ச்சி அடைந்தார்.