Skip to main content

மாற்றுத்திறனாளி குழந்தையின் வாழ்க்கையைப் பேசும் ‘பிள்ளையார் சுழி’

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
deeraj in pillaiyaar suzhi

‘டபிள் டக்கர்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் தீரஜ் நடித்துள்ள படம் ‘பிள்ளையார் சுழி’. மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அபிநயா கதாநாயகியாக நடித்திருக்க ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற முக்கிய துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.  ஹரி எஸ்.ஆர் இசையமைத்துள்ளார். 

சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள இந்த படம், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம்  நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது. இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? - கங்குவா பட அப்டேட்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
kanguva movie update

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படம் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி சூர்யாவின் 49வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக சூர்யாவின் ரசிகர்களை மகிழ்விக்க கங்குவா படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அன்றைய தினம் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் (பாடல்) வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

கூழாங்கல் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு; கவனத்தை பெரும் ‘ஜமா’ டீசர்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
jama teaser released

லெர்ன் அண்ட் டெக் புரொடக்‌ஷன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த படம் ‘கூழாங்கல்’. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது இறுதி போட்டி வரை சென்று பின்பு வெளியியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லெர்ன் அண்ட் டெக் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கியுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், அம்மு அபிராமி, சேத்தன், காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஸ்ரீ கிருஷ்ண தயாள், சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில், கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், பார்த்தா எம்.ஏ படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த டீசரில், தெருக்கூத்தின் போது ஆண் கலைஞர்கள் பெண் வேடமிடும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகள், அதனால் இந்தச் சமூகம் கொடுக்கும் எதிர்வினைகள், அதைத் தெருக்கூத்து கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரிப்பதாக இந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் படத்தை போல், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யதார்த்தமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், சினிமா ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறது.