Deepika Padukone will unveil the FIFA World Cup trophy

Advertisment

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் காலிறுதி ஆட்டம் வருகிற 9, 10, 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் குரோசியா - பிரேசில், நெதர்லாந்து - அர்ஜென்டினா, இங்கிலாந்து - பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ - போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் போட்டி போடுகின்றன.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டி வருகிற 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியின் உலகக்கோப்பையை அறிமுகம் செய்ய நடிகை தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்தியப் பிரபலம் என்ற பெருமையை தீபிகா படுகோனே பெறுகிறார். இதனால் விரைவில் தீபிகா படுகோனே கத்தாருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த இப்போட்டியின் துவக்க விழாவில் நடிகை நோரா ஃபதேஹி நடனமாடினார். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக் கோடியை தலைகீழாக பிடித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.