Advertisment

"நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை" - தீபிகா படுகோன் நெகிழ்ச்சி !

deepika padukone talk about cannes film festival

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைபிரபலங்கள் கமல்ஹாசன், பா.ரஞ்சித், நவாசுதீன்சித்திக், ஏ.ஆர் ரஹ்மான், மாதவன், தமன்னா, ஊர்வசி ரவ்டலா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் அடங்கிய குழு கலந்து கொண்டுள்ளது.இவ்விழா நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகைதீபிகா படுகோன் கலந்து கொண்டுள்ளார். இந்திய பிரபலங்கள் அனைவருக்கும் இவ்விழாவில் சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இவ்விழாவில் பேசிய தீபிகா படுகோன், "கேன்ஸ்திரைப்பட விழாவில் நடுவராகும்வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. எனது 15 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இது நம்பமுடியாத பயணம். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இந்தியா செல்லும் நிலையில் மாறி விரைவில் கேன்ஸ்திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Bollywood cannes film festival deepika padukone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe