Advertisment

ராஜமௌலி படத்தில் இணையும் முன்னணி நடிகை

Deepika Padukone to share screen with Mahesh Babu in Rajamouli's next

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய ஆர்.ஆர்.ஆர் படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானது.

Advertisment

அதனால் ஆஸ்கர் விருது போட்டிக்குதனிப்பட்ட முயற்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.

Advertisment

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார் ராஜமௌலி. இப்படத்தின் கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் உலகளாவிய ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனவும் ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியிலான இந்தியப் படமாக இருக்கும் எனவும் ராஜமௌலி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

deepika padukone mahesh babu ss rajamouli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe