கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின்மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமான தீபிகா படுகோனே பாலிவுட்டில்பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர்தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ப்ரொஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நாக்அஸ்வின் இயக்க, முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட லேசான நெஞ்சுவலி காரணமாகநடிகை தீபிகா படுகோனே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த படக்குழு அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீபிகாபடுகோனுக்குமருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில்இதயத்துடிப்பு சீராகி உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட தீபிகாபடுகோனேமீண்டும் படப்பிடிப்புதளத்திற்குத்திரும்பியுள்ளார்.