பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏன் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். கடந்த வருடம்தான் தீபிகா படுகோன் தன்னுடைய காதலனான ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்திலும் ஒரு சிறிய கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம்.

Advertisment

deepika

இந்நிலையில் சென்னையில் டிஷாட் வாட்ச் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் தீபிகா. அவரை காண பல ரசிகர்கள் அந்த மாலில் சூழ்ந்திருந்தனர்.

Advertisment

அப்போது பேசியவர், “நான் கடந்த ஆண்டு சென்னைக்கு வந்திருந்தேன். அதன் பிறகு இப்போது வந்துள்ளேன். சென்னை மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இங்கு வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை எனக்கு அழிக்கிறது. என்னுடைய பூர்விகம் பெங்களூராக இருந்தாலும், சென்னையும் பூர்விகம் போன்றதுதான். ஒருநாள் தலைமறைவாக வாழ்வேன் என்றால் அது சென்னை மக்களோடுதான். சுவையான தென்னிந்திய உணவுகள் எனக்கு பிடிக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம் தான்” என்று கூறியுள்ளார்.