2023 ஆஸ்கர் விழாவில் தீபிகா படுகோனே

Deepika Padukone also presenting 2023 Oscars award function

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் 95வது ஆஸ்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் விழாவை பார்க்க அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச அளவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வருகிறார். கடந்த வருடம் ஆஸ்கருக்கு இணையாக சினிமா பிரபலங்கள் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் ஒருவராக இருந்தார். உலக கோப்பை கால்பந்து 2020 இறுதி போட்டியில் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தற்போது 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவிலும் பங்கேற்கவுள்ளார்.

95th Oscars awards deepika padukone
இதையும் படியுங்கள்
Subscribe