தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி

Deepika Padukone admitted to hospital

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தற்போது ஷாருக்கான் நடிக்கும் 'பதான்', பிரபாஸ் நடிக்கும் 'ப்ராஜெக்ட் கே' மற்றும் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தீபிகா படுகோனே கடந்த திங்கள்கிழமை இரவு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இப்போது குணமடைந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எதன் காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் 'ப்ரொஜெக்ட் கே' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது தீபிகா படுகோனேக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மருத்துவர்களின் சிகிச்சையால் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

deepika padukone hospital
இதையும் படியுங்கள்
Subscribe