deepika padukone act with kamalhaasan indian 2 film

Advertisment

இயக்குநர்ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத்தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனாபரவல், இயக்குநர் ஷங்கருக்கும்தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு போனது.இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6ab4d4e6-e2e3-4830-a99f-4a535335b0fe" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_5.jpg" />

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும்இயக்குநர் ஷங்கருக்கும்இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணியை தொடங்க உள்ளார்.இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக இந்தியன் 2 படத்திலிருந்து விலகினார்.

Advertisment

இந்நிலையில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது . ஆனால் இது குறித்து படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முக்கால்வாசி எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதுபுது நடிகையை வைத்து எடுக்க வேண்டும்என்றால் காஜல் அகர்வால் சம்பந்தபட்ட காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு முதலில் இருந்து எடுக்க வேண்டும் என்பதால் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலேஎஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவேதெரிகிறது" எனக்கூறுகின்றனர்.