தமிழ் சினிமாவில் 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமாகி 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'காத்து வாக்குலரெண்டு காதல்' படத்தை இயக்கிவருகிறார். இயக்குநர்விக்னேஷ் சிவன் படம் இயக்குவது மட்டுமல்லாமல், நடிகை நயன்தாராவுடன்இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
சமீபத்தில், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த தகவலைவிக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் இப்படத்திற்கு 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணகுமார் இப்படத்தில் கதாநாயகனாகநடிக்கவுள்ளார். இவர்சூர்யாநடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் சே வாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருவருக்குஜோடியாக பாடகி ஜோனிதா காந்தி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மால்தி சாஹர் நடிக்கவுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹரின் தங்கையான மால்தி சாஹர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.