கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் டியர் காம்ரேட் படம் உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மொத்தம் நான்கு மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்ததால் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனாலும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

Advertisment

rashmika vijay

இதனால் படக்குழு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. படத்தின் நீளம்தான் மிகப்பெரிய குறையாக ரசிகர்களிடையே பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் இப்படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் என்பது பலரின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் படக்குழு 14 நிமிடங்கள் காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட கேண்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு சம்பந்தம் இல்லதா காட்சிகள் என்று கருதப்பட்ட சில காட்சிகளை நீக்கியுள்ளனர். தற்போது 14 நிமிடங்கள் கட் செய்யப்பட்டு 156 நிமிடங்கள் படமாக இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிகிறது.