Advertisment

ஓடிடி-யில் சாதனை படைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’

dd returns create records in ott

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியான படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. கதாநாயகியாக சுரபி நடிக்க மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லிஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆஃப்ரோ என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துசாதனை படைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்கைத் தொடர்ந்துஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக மெரினா மாலில் பிரத்தியேக ஸ்கேரி ரூம் அமைத்துள்ளது ஜீ5 நிறுவனம்.

Advertisment

Santhanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe