Skip to main content

ஓடிடி-யில் சாதனை படைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

dd returns create records in ott

 

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியான படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. கதாநாயகியாக சுரபி நடிக்க மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆஃப்ரோ என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 

இப்படம் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக மெரினா மாலில் பிரத்தியேக ஸ்கேரி ரூம் அமைத்துள்ளது ஜீ5 நிறுவனம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல” - தனது ஸ்டைலில் சந்தானம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
santhanam movie Inga Naan Thaan Kingu trailer released

சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வழங்க, சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி பிரியாலயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையாவும், மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. கலர்ஃபுல்லாக அந்த போஸ்டர் அமைந்திருந்த நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த இளைஞனாக வரும் சந்தானம் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார். பின்பு திருமணம் முடிந்த பிறகு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறர். அதிலிருந்து தப்பித்தார இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரைலர் அமைந்திருக்கிறது. மேலும் சந்தானம் “நடிகர் சங்கத்தைக் கட்டி முடிச்சிட்டுத்தான் கல்யாணம் பனண்ணுவேன்னு அடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல. எப்பவும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்கிறதுக்கு சிம்புவும் இல்ல” என ட்ரலைர் ஆரம்பத்தில் பேசும் வசனம் வழக்கமான அவரது கிண்டல் கலந்த ஸ்டைலில் இடம்பெறுகிறது. இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.