Skip to main content

ஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி 

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen) படம். தற்போது இதன் இரண்டாம் பாகமான 'ப்ரோசன் 2' டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

 

cs

 

 

தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார்.  மேலும் ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். அதேபோல் எல்சாவின் தமக்கை அன்னாவிற்கு டிடி திவ்யதர்ஷினி குரல் தந்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ப்ரோசன் 2 படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷ்ருதிஹாசன், டிடியின் மயக்கும் குரலில் 'ப்ரோசன் 2' ட்ரைலர்..வீடியோ உள்ளே!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

 

 

Next Story

ஹாலிவுட் படத்திற்காக தன் குரலையே அர்ப்பணித்த ஸ்ருதிஹாசன்..! 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

2013ஆம் ஆண்டு வெளியான 'ஃப்ரோசன்' திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்து சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான டிஸ்னினியின் 'ஃப்ரோசன் 2' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் நவம்பர் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் '.ஃப்ரோசன் 2' படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார்.

 

shruti

 

இதைத்தொடர்ந்து இப்படத்தின் தமிழ் பதிப்பில் வரும் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் 'இன் டு தி அன்னோன்' என்ற ஒரு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் குறித்து ஸ்ருதிஹாசன் பேசியபோது...

 

aX

 

''ஃப்ரோசன்' திரைப்படத்தில் எல்சா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்சா தன் இளைய சகோதரி அன்னா மீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரி மீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்சா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்" என்றார்.