ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen) படம். தற்போது இதன் இரண்டாம் பாகமான 'ப்ரோசன் 2' டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

Advertisment

cs

தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். மேலும் ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். அதேபோல் எல்சாவின் தமக்கை அன்னாவிற்கு டிடி திவ்யதர்ஷினி குரல் தந்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ப்ரோசன் 2 படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.