/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_26.jpg)
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பட வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். குறிப்பாக இவரது நடனத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை இன்று (08.04.2023) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் அவருக்கு வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் 'புஷ்பா 2' படக்குழு வாழ்த்து தெரிவித்து படத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை நேற்று மாலை வெளியிட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த அவர், புஷ்பா படத்தில் இடம்பெறும்அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து காண்பித்து இரண்டாம் பாகத்திற்கு காத்திருப்பதாகத்தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் மட்டுமல்லாது அவரது குழந்தையும் அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த படம் வெளியாகி பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசியும், படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
'புஷ்பா 2' படத்தின் பணிகள்முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்தை ரவிசங்கர் தயாரிக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கின்றனர். முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)