David Warner danced pushpa movie song goes viral social media

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது.

Advertisment

இந்நிலையில் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ரீ வள்ளி..." பாடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் போன்றுநடனமாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஏற்கனவே அல்லு அர்ஜுன் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாடிய 'புட்ட பொம்மா..."பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன்நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.