butta

பிரபல தெலுங்கு பட இயக்குனர் த்ரிவிக்ரம்இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்தஜனவரிமாதம்வெளியானபடம்'அலாவைகுந்தபுரமலோ'. இந்த படம் பெரும் வரவேற்பை பெற முதல் காரணமாக இருந்தது இந்த படத்தின் இசைதான். இசையமைப்பாளர் தமனின்இசை கேட்போர் அனைவரின்மனதிலும் இடம்பிடித்தது.

Advertisment

Advertisment

படம் வெளியாக்குவதற்கு முன்பும், வெளியான பின்பும்இணையத்தில் பல சாதனைகளைபுரிந்ததுஇப்படத்தின் இசை ஆல்பம். குறிப்பாக புட்ட பொம்மாஎன்கிற பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்தது. பாடலை போல அந்த பாட்டிற்கு ஆடியநடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது.

பலரும் அந்த ஸ்டெப்பை ஆடி டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தனர். அந்த வரிசையில் பிரபல கிரிக்கெட்டரும் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல்லில் ஹைதராபாத் பிரான்சைஸிற்காக ஆடும் டேவிட் வார்னர்தனது மனைவி, குழந்தையுடன் அந்த பாடலுக்குநடனமாடிபதிவிட்டுள்ளார்.