பயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்!

david bekham

கூடைப்பாந்தாட்டத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் ‘தி லாஸ்ட் டான்ஸ்’. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், இதேபோல தனது வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அவருடைய ஸ்டூடியோ 99 தயாரிப்பு நிறுவனம் முதற்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளது. அமேசான் ப்ரைம் அல்லது நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுடன் பெக்காம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், இயக்குநர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

david beckham
இதையும் படியுங்கள்
Subscribe