Skip to main content

பயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
david bekham

 

 

கூடைப்பாந்தாட்டத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் ‘தி லாஸ்ட் டான்ஸ்’. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

இப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், இதேபோல தனது வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்காக அவருடைய ஸ்டூடியோ 99 தயாரிப்பு நிறுவனம் முதற்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளது. அமேசான் ப்ரைம் அல்லது நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுடன் பெக்காம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், இயக்குநர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழகுக்காக தனது சொந்த ரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்ளும் பிரபல பாடகி...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

hyjn

 

அழகுக்காக பெண்கள் தற்பொழுது பலவகையான விதவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி அழகுசாதன பொருள் பயன்பாட்டின் உச்சத்தையே தொட்டிருக்கிறார் பிரபல பாடகி விக்டோரியா பெக்கம். பிரிட்டனை சேர்ந்த பிரபல பாடகியும், கால்பந்து வீரர் டேவிட் பெக்கமின் மனைவியுமான இவர் தனது ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாய்சரைஸர் கிரீமையே முகத்திற்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'என்னுடைய ரத்தத்தில் இருந்து செல்களைப் பிரித்து அதன்மூலம் இந்த மாய்சரைஸர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அலர்ஜியைப் போக்க கூடியது. செல்களை மீண்டும் புதுப்பிக்கும் திறன் கொண்டது. பெர்லினில் உள்ள மிகப்பெரிய மருத்துவர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த மாய்சரைஸரை தயாரிக்க ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் செலவானது என அதில் குறிப்பிட்டுள்ளார்.