Daughter of Khushboo who is making an entry in cinema

Advertisment

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ஆம் ஆண்டு சுந்தர்.சி-க்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேலான படங்களில் நடித்துள்ள குஷ்புவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. அரசியலில் அதிக கவனம் செலுத்திவரும் இவர் சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் 'ஹரா' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா நடிக்கவருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்புதெரிவித்துள்ளார். அந்த பதிவில், " எனது மூத்த மகள் லண்டனில் உள்ள சிறப்பான நடிப்பு பயிற்சி பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். அவள் விரும்பியதால் அவளின் போராட்டம் தொடங்குகிறது. நாங்கள் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ மாட்டோம். அவளுக்கு உங்களின் ஆசி தேவை" என குறிப்பிட்டுள்ளார்.