Advertisment

அஜித் பட நடிகையை மணந்த தர்பார் வில்லன்...

தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பவர் நவாப் ஷா. இவர் நடிகை பூஜா பத்ராவை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து நடிகை பூஜா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment

darbar villain

90களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்து வந்தவர் பூஜா பத்ரா. தமிழில் ஒருவன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து 2002ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவரை முதன்முறையாக மணந்தார் பூஜா. பிறகு 2011ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் நவாப் ஷாவும், பூஜா பத்ராவும் முதன் முறையாக சந்தித்துக்கொண்டனர். அதனையடுத்து காதலில் விழுந்த இருவரும் ஜூலை நான்காம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் குறித்து நேற்றுதான் வெளியுலகத்திற்கு தெரிவித்துள்ளார் பூஜா பத்ரா. பலரும் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

darbar
இதையும் படியுங்கள்
Subscribe