Published on 25/07/2019 | Edited on 25/07/2019

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. மேலும் தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும், என்கவுண்ட்டர் போலீஸ் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 25ஆம் தேதி) மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியிடுவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் செய்துள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.