லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் பாரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மும்பையில் துவங்கியது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் ரஜினி மாலை, பரிவட்டம், ஜிப்பா அணிந்திருந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.