தான் தயாரிக்கும் படங்களுக்கு கலைப்புலி எஸ்.தாணும் செய்யும் விளம்பரங்கள் எப்போதும் பேசப்படும். அப்படித்தான், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்திற்கு விமானங்களில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தாணுவைப்போலவே இப்போது லைகா நிறுவனமும் விளம்பரத்தில் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக வுள்ள தர்பார் படத்துக்கும் விமானங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை - ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தர்பார் படத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே, இந்த விளம்பரம் போஸ்ட விமானத்தில் ஒட்டப்பட்டும் படங்களில் வெளியானது. இந்நிலையில், விமானத்தில் பயணிகள் செல்லும் படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.