ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து, வருகிற ஜனவரி 9ஆம் தேதி உலகம் மூழுவதும் வெளியாக இருக்கும் படம் தர்பார். அமெரிக்காவில் 8ஆம் தேதியே ரிலீஸாக இருக்கிறது.

Advertisment

darbar

ரஜினியை வைத்து 2.0 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்த லைகா நிறுவனம்தான் தர்பார் படத்தையும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.

2.0 தயாரிப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான டிஎம்ஒய் கிரியேஷன் நிறுவனத்திடம் பெற்ற ரூ.20 கோடி கடனை திருப்பி அளிக்கும் வரை தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என்று அந்நிறுவனம் வழக்கை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கு ஜனவரி 2க்குள் லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் தர்பார் படம் புரோமோஷனிற்காக ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தர்பார் போஸ்டரை பெயிண்ட் செய்துள்ளது. சுமார் நான்கு விமானங்களிலும் தர்பார் படத்தின் புரோமோஷனுக்காக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு கபாலி படத்தின் புரோமோஷனிற்காக விமானங்களில் கபாலி படத்தின் போஸ்டர்கள் பெயிண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.