கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தி பேட்ட படத்தில் நடித்ததை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

darbar

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 2.0 தயாரித்த லைகா நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

Advertisment

தளபதி படத்திற்கு பின்னர் சந்தோஷ் சிவன் இப்படத்தில் பணி புரிகிறார். பேட்ட படத்தில் இசையமைத்த அனிருத்தான் இந்த படத்திலும் இசையமைக்கிறார். முருகதாஸின் துப்பாக்கி படத்திலிருந்து சர்கார் வரை படத்தொகுப்பு செய்த ஸ்ரீகர் பிரஸாத்தான் இப்படத்திற்கும் படத்தொகுப்பு செய்கிறார்.

alt="natpuna ennanu " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4c3a2595-5855-4d2c-b66c-95d3e94f3151" height="130" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105%20natpuna%20ennaanu%20theriyuma_3.png" width="379" />

Advertisment

கடந்த மாதத்திற்கு முன்பு மும்பையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருவதால் இரண்டாம் கட்ட ஷூட்டிங் இந்த மாத இறுதியிலேயே தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொங்கலில் தர்பார் வெளியானால் ரஜினிக்கு இது 11வது பொங்கல் பண்டிகை ரிலீஸ் ஆகும்.