Published on 16/05/2019 | Edited on 16/05/2019


ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் வரும் மே 29ம் தேதி இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் யோகி பாபு மற்றும் நிவேதா தாமஸ் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.