
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தார்கள்.
இணையதளத்தில் இந்தியாவின் இன்றைய டிரெண்டிங்கில் ‘தர்பார்’ராஜ்ஜியம்தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்...” என்று கூறுவதாக வசனம் உள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வைத்தே இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது என்றும், படையப்பா படத்தில் ஜெயலலிதாவை சீண்டுவதாக வசனம் வைத்தது மாதிரி, தர்பார் படத்தில் சசிகலாவை சீண்டுவதாக வசனம் வைத்திருக்கிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சமீபத்தில் சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.