Advertisment

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘டேனி’!

vara

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 90 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பொழுதுபோக்கு இடங்களான மால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

சினிமா பட ஷூட்டிங்கும் எடுக்க முடியாமல் தமிழ் திரையுலகமே பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. இதனிடையே ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமும் கீர்த்தி நடித்த பெண்குயின் படமும் வெளியாகியுள்ளது.இப்படங்களை தொடர்ந்து, பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'டேனி' படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படம் எப்போது ரிலீஸாகும் போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Advertisment

சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேனி' படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe