danush

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

‘வடசென்னை’ படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கிடையே தனுஷ் தற்போது ஒரு சரித்திர படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு ஆக்‌‌ஷன் திரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு செல்வராகவன் அடுத்த ஆண்டு இறுதியில் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படம் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.