Advertisment

''வெற்றிமாறன் சொல்லவேணாம்னு சொன்னாரு...பரவால்ல உங்ககிட்ட தான சொல்றேன்'' - தனுஷ் அதிரடி!

வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான 'வெக்கை' நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் படம் குறித்து பேசியபோது...

Advertisment

danush

"அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமாக இருக்கின்றது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி ,அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.

Advertisment

dcda

வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். நாங்கள் மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறோம். அவர்கள் இப்படத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால் வடசென்னை அவர்களை எதோ செய்திருக்கிறது. எங்களுக்கு அதுவே போதும். மக்கள் இப்படி நினைப்பதே பெரியது. நாங்கள் விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது. இருந்தும் எங்களிடம் சில வருத்தங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் எங்களுக்காக வருத்தப்படவில்லை. இப்படத்திற்காக உழைத்த ஜாக்சனுக்காக, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜிற்காக, ராட்சசன் ராமிற்காக, மேற்குத்தொடர்ச்சி மலை லெனின் பாரதிக்காகதான் நங்கள் வருத்தப்பட்டோம். இதைபற்றியெல்லாம் வெற்றிமாறன் பேசவேண்டாம் என்றார். ஆனால் பரவாயில்லை நீங்கள் தானே. உங்களிடம் தானே சொல்கிறேன். நான் எதையும் மனதில் வைத்துக்கொள்வதில்லை" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/unnbhhlOyxY.jpg?itok=kkR-GRRJ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

vetrimaran Danush asuran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe