/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201805241905241441_1_dhanush._L_styvpf.jpg)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் ரகு என்கிற காளியப்பன் அவர்கள் நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தில் உறுப்பினர் ஆவார். இதையடுத்து இவர் இறந்ததற்கு தற்போது நடிகர் தனுஷ் தனது இரங்கலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S. ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)