Published on 19/07/2019 | Edited on 19/07/2019

ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து, கார்த்திக் சுப்பாராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் இன்று ஆரம்பமானது. காங்ஸ்டர் - திரில்லர்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில் இப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். நடனம் எம் செரிஃப், பாபா பாஸ்கர் அமைக்கவுள்ளனர்.