'Danush Birthday' - Video going viral

Advertisment

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பிற்காக அதிக தேசிய விருதுகளை வாங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தனுஷ். கோலிவுட்டில் ஆரம்பித்த தனுஷின் பயணம் தற்போது பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டோலிவுட் வரை தொடர்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் இவர் நடிப்பில் வெளியான ' 'தி கிரே மேன்' படம் தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழில் 'நானே வருவேன்' மற்றும் 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'வாத்தி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் டீசர் இன்று மாலை 6மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனுஷ் தனது 39-வது பிறந்தநாளை இன்று (28.07.2022) கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரசன்னா தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "தன்னைத் தானே வார்த்தெடுத்து உலகம் வரை ஆச்சரியமாக எட்டிப்பார்க்க வைத்த அசகாய சூரன். நடிப்பின் மறுபரிமாணம்.என்றும் இப்படியே உயர்ந்திருக்க எனது வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ்" என குறிப்பிட்டுள்ளார். இதே போல் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment