Published on 11/03/2019 | Edited on 11/03/2019

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பாட், மௌனி ராய், நாகர்ஜுனா அக்கினேனி ஆகியோர் நடிக்கும் பிரமாண்ட படம் 'பிரம்மாஸ்த்ரா'. மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில் வெளியானது. இதை தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் வெளியிட்டனர். மேலும் தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும், பிரபல நடிகர் ராணா டகுபடியும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது. கரண் ஜோகர் & பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.