Advertisment

"ஒரு குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டோம்" -தனுஷ் வேதனை!

jdj

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி. உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்..

Advertisment

"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்எஸ்.பி.பி. சார். ஒவ்வொருவரின் வீட்டிலும் என்றென்றும் எதிரொலிக்கும் குரல் நீங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர் நீங்கள். உங்கள் குரலால் நீங்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக எங்களுடன் வாழ்வீர்கள். அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். எல்லாவற்றிற்கும் நன்றி சார். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

Danush spb DHANUSH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe