/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actor-danush-2.jpg)
பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ்இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"நற்பண்பு கொண்ட நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த் சார். விரைவாக சென்றுவிட்டீர்கள் சார். மிக விரைவாக. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)