/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_138.jpg)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிடபடக்குழுத் திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. பின்னர், படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
மேலும், கரோனா பரவலின் வேகம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு 100 சதவிகிதப் பார்வையாளர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படம் இப்போதும் ஓடிடி-யில் வெளியாவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும், படத்தை ஓடிடிக்கு கொடுக்க படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போலவே நானும் 'ஜகமே தந்திரம்' படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)