villain

Advertisment

டேனியல் பாலாஜி, தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். வேட்டையாடு விளையாடு படத்தில் இவருடைய நடிப்பு இன்றுவரை ரகுவரனுக்கு அடுத்த ஒரு சிறந்த தமிழக வில்லன் என்று பெயரெடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட வடசென்னை படத்தில் இவருடைய ‘தம்பி’கதாபாத்திரம் எல்லோரையும் ஈர்த்தது.

இந்நிலையில், ஆவடி செக்போஸ்ட் அருகே டேனியல் பாலாஜி அங்காள பரமேஸ்வரி கோவிலை கட்டி நிறுவியுள்ளார். நேற்று இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இது குறித்து பேசியவர், “ இந்த கோவிலை கல்லால் கட்டி, கும்பாபிஷேகம் வேண்டும் என்று எனக்கு ஒரு சின்ன பிராப்தம் இருந்தது. இந்த கோவிலை கட்ட உதவியாக இருந்தது எனது குடும்பத்தாருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.